பாரிய தொகை நிதியீட்டலை இலக்கு வைத்து உயரதிகாரிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய!
2022ஆம் ஆண்டுக்கான எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கான வழிகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துரையாடவுள்ளார்.
மத்திய வங்கி, அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி, நிதி மற்றும் எரிசக்தி அமைச்சுகள், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கூட்டத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.
போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கியிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆண்டு முழுவதும் தடையின்றி விநியோகத்தை பராமரிக்க 88 கப்பல் இறக்குமதிகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது கோரிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு மாதத்திற்கு 90,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், 150,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் தேவைப்படும் என்று CPC பரிந்துரை கூறுகிறது.
எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவில் இருந்து விரைவில் பெற்றுக்கொள்ளப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவுக்கு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக நிதி வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri