விழிப்புடன் செயற்பட்டு அனர்த்தங்களை தவிர்க்கவும்! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
எனவே காடுகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு பயணம் செய்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
வறண்ட காற்று மற்றும் கடும் வெப்பம்
வறண்ட காற்று மற்றும் கடும் வெப்பம் நிலவும் சூழலில், மிகச்சிறிய தீப்பொறி பாரிய அளவிலான வனப்பகுதியை அழிக்கும் நிலை உள்ளமையினால் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல்களைக் கட்டுப்படுத்த முப்படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புடன் பேரிடர் மேலாண்மை மையம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அவசர எண்கள் அறிமுகம்
எனவே தீப்பரவல்கள் அல்லது அவசர நிலைமைகள் குறித்து பொதுமக்கள் எந்த நேரத்திலும் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மும்மொழிகளிலும் தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்பதால், விழிப்புணர்வுடன் செயற்பட்டு அனர்த்தங்களைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெடித்து சிதறிய ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுத கிடங்கு! பஸ்டர் குண்டுகளால் குறிவைத்து தகர்த்திய அமெரிக்கா
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri