மன்னார் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள் (PHOTOS)
மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை இன்று விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக மன்னார் நகர பகுதியில் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பகல் நேரங்களில் வழங்கப்படும் நீர் வழங்கலின் அழுத்தம் குறைவாக காணப்படும்.

இதனால் பகல் நேரங்களில் எமது பாவனையாளர்கள் துரித கதியில் நீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை இதற்கான காரணமாக உள்ளது.

எனவே முருங்கனில் இருந்து மன்னாரிற்கு நீரை விரைவுபடுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
மன்னார் நகர பகுதிகளில் நீர் இணைப்பு பெற்றுள்ள பாவனையாளர்கள் நாளாந்தம் இரவு நேரங்களில் தமது வீடுகளில் உள்ள நீர் தாங்கிகள் அல்லது கொள்கலன்களில் நீரினை சேமித்து வைத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்”என மன்னார் மாவட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri