யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவினர் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் A+ வகை குருதிக்குத் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும்,கொடையாளர்கள் இரத்ததானம் வழங்க முன்வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நேரடியாக இரத்த வங்கிப் பிரிவிற்கு வருகை தந்து இரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, குருதிக் கொடையாளர்களை இரத்ததானம் வழங்க முன்வருமாறும், குருதிக் கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
