தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்
சமீபத்திய வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த ஆயிரக்கணக்கான அரச ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக, தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம் உடனடியாக ஃப்ரீசர் (Freezer) வசதிகளை வழங்குமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்கள், பத்திரங்கள், காணிப் பதிவேடுகள், நிதிக் கோப்புகள் மற்றும் தனிப்பட்ட பணியாளர் பதிவுகள் உட்பட நூற்றுக்கணக்கான கன மீட்டர் அளவிலான விலைமதிப்பற்ற ஆவணங்கள், உடனடியாக உறை நிலையில் வைக்கப்படாவிட்டால், பூஞ்சணம் காரணமாக நிரந்தரமாக அழிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது.

முறையான பாதுகாப்புச் சிகிச்சை அளிக்கப்படும் வரை மேலும் சிதைவதைத் தடுக்க, உறைநிலை ஒரு முக்கியமான அவசரகால நடவடிக்கை என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |