உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம்
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்படும் என்ற கருத்தில் எந்தவித நியாயமும் அடிப்படையும் இல்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் ஆணைக்குழு இன்று ஆராய்ந்தது.
இந்த நிலையில் உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதிலும், இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் பிரகடனத்தை வெளியிடுவதிலும், அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்
அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதற்கு உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மீண்டும் ஆணைக்குழு வலியுறுத்துகிறது என குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்தார்.
எனவே செப்டெம்பர் 23 திகதியிட்ட வர்த்தமானியை திரும்பப்பெறுமாறும், தேசிய சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமைகள் விதிமுறைகள் மற்றும் தரநிலைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும், அந்த விதிமுறைகளை மீறும் அறிவிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு, அரசாங்கத்தை அறிவுறுத்துகிறது என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri