மகாவலி ஆற்றை அண்மித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்
மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல அணைக்கட்டின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்டெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் நேற்று (09.12.2023) அதிகாலை முதல் வன்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொறியியலாளர் அலுவலகம் எச்சரிக்கை
இதன் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கம் மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அணைக்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மேலும், மகாவலி ஆற்றுக்கு அருகில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam