EPF பிரிவின் சேவை மாற்றம் தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கை தொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஊழியர் சேமலாப நிதி பிரிவின் சேவை மாற்றம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (18.03.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இனிவரும் அனைத்து புதன்கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், EPF என்ற ஊழியர் சேமலாப சேவைகளைப் பெறத் திட்டமிட்டிருந்த உறுப்பினர்களுக்கான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதன்படி, புதன்கிழமைகளில் முன்பதிவு செய்திருந்த உறுப்பினர்கள், காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அடுத்த நான்கு வேலை நாட்களுக்குள் (வியாழன், வெள்ளி, திங்கள் அல்லது செவ்வாய்) தங்கள் வருகையை மீளமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுச் சேவை நடவடிக்கைகளை மேம்படுத்தவும், புதிய விடுமுறை அட்டவணைக்கு ஏற்ப செயற்பாடுகளைச் சீரமைக்கவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri