மன்னார் மாவட்ட 'நாடு' இன நெல் உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன நெல்லினை நிபந்தனையின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் 2022/2023 பெரும்போக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் 2023.02.09 ஆம் திகதி,சுற்று நிருபத்திற்கு அமைவாக, மாவட்ட செயலாளர் தலைமையில் சிறிய மற்றும் நடுத்தரளவு அரிசி ஆலை உரிமையாளர்கள் , கூட்டுறவு சங்கங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன நெல்லினை மட்டும் பின்வரும் நிபந்தனை அடிப்படையில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யுமாறு கோரிக்கை
ஆகக் கூடிய ஈரப்பதன் 14 சதவீதம் மற்றும் ஆகக் கூடிய நெற்பதரினளவு 9 சதவீதம் உடைய நாடு நெல் ரூபா 100 ரூபாவிற்கும்,ஈரப்பதன் 14 சதவீதத்திற்கும் அதிகமான மற்றும் 22சதவீதம் அதற்கு குறைந்த நாடு நெல் ரூபா 88 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் நெல்லை வழங்குவதற்கு தயாராகவுள்ள விவசாயிகள் இது பற்றிய
தகவல்களை உடனடியாக கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட காரியாலயத்திற்கு
(023-2222162) திங்கள் தொடக்கம் வெள்ளி வரை, காலை 9.00 தொடக்கம் மாலை 4.மணி
வரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan