அனுமதியின்றி நெதன்யாகுவுடன் அவசர சந்திப்பு - அமெரிக்கத் துணை ஜனாதிபதியின் அதிரடி முடிவு
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்(Pete Hegseth), இஸ்ரேலுக்கு அறிவிக்கப்படாத திடீர் பயணம் மேற்கொண்டு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பு நேற்று(19.10.2026) இஸ்ரேலின் தெற்குப் பாலைவனப் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவுக்கு ஆதரவு கொடுக்கும் ட்ரம்ப்
பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்க அமெரிக்கப் பாதுகாப்புத் துறை (Pentagon) மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும், மத்தியக் கிழக்கு பிராந்தியத்திலுள்ள அமெரிக்கப் படைப் பிரிவினரைத் தான் சந்தித்ததாக ஹெக்செத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' தளத்தில் நெதன்யாகுவுக்கு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
எனினும், "நான் அமெரிக்கத் தேர்தல்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன், இஸ்ரேலியத் தேர்தலில் தலையிடவோ, யாருக்கும் ஆதரவளிக்கவோ இல்லை" என அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார விடயத்தை தமிழீழ விடுதலை புலிகளுடன் கோர்த்து விடும் பயங்கர சதி! திரைமறைவில் செயற்படும் அரசியல் பலம்...
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 6 நிமிடங்கள் முன்
450-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் திரும்பவே இல்லை: அமெரிக்க செயலருக்கு பிரித்தானியா கண்டனம் News Lankasri
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri