மத்திய கிழக்கு நெருக்கடி! உலக சந்தையில் உச்சத்தை எட்டியுள்ள உரத்தின் விலை
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எட்டு முக்கிய உரங்களில் ஆறு உரங்களின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகமான விலை உயர்வை எட்டியுள்ளதாக குறிப்பிடுகின்றது.
உச்சத்தை எட்டியுள்ள உரத்தின் விலை
அதன்படி, ஒரு டொன் யூரியா உரத்தின் விலை கடந்த மாதத்திற்கு முன்பு இருந்ததை விட 11% அதிகமாக உயர்ந்து ஒரு டொன்னுக்கு 677 டொலரை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ ஆர்லியன்ஸில் துகள் யூரியாவின் விலை, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
அன்ஹைட்ரஸ் உரத்தின் விலை கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 8% அதிகரித்து அதன் சராசரி விலை ஒரு டொன்னுக்கு 931 டொலராக பதிவாகியுள்ளது.
2022ல் உக்ரைன் - ரஷ்யா போர் வெடித்தபோதும் உரங்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. பின்னர், 2023 மற்றும் 2024-ல் நிலையாக இருந்த நிலையில், தற்போது விலை மீண்டும் அதிகரித்துள்ளது.