மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்! சொகுசு வாகனங்களுடன் இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கப்பல்கள்
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக லம்போர்கினி, ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் ஃபெராரி உள்ளிட்ட சுமார் 50 பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்கள் இலங்கை மற்றும் சீனாவில் இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், லம்போர்கினி உள்ளிட்ட சொகுசு வாகனங்களுக்கான முக்கிய மையமாக இலங்கை மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை துறைமுகங்களில் நெரிசல்
துபாயிலிருந்து பொருட்கள் திருப்பிவிடப்பட்டதால் இலங்கை துறைமுகங்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்கள் அடங்கிய ஒரு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்கு 10 நாட்களுக்கும் மேலாக தாமதமாகியுள்ளன.
இலங்கை உட்பட தெற்காசிய பகுதிகளில் கப்பல்கள்
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மையால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளமையினால் கப்பல் போக்குவரத்து அட்டவணைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பொருட்கள் மாற்று பாதைகளுக்கு திருப்பிவிடப்பட்டதால் கிடங்குச்செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் ஜப்பான் மற்றும் தென் கொரிய ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
இதன் விளைவாக இலங்கை உட்பட தெற்காசிய பகுதிக்கு அருகில் சில கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.