30 வருடமாக மகன் படுத்த படுக்கை! வாய் பேச முடியாத பேத்தி: மூதாட்டி ஒருவரின் சோகக் கதை இது (video)
இலங்கையில் தற்போது இருக்கக் கூடிய பொருளாதார நெருக்கடி சூழலில் சாதாரண மக்கள் தொட்டு பணக்காரர்கள் வரை பெரும் துன்பம் அனுபவித்துக் கொண்டுள்ளனர்.
இவர்களையெல்லாம் தாண்டி நடுத்தர வர்க்கத்திற்கும் கீழுள்ள வறுமையின் கோர பிடியில் சிக்குண்டுள்ள மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தையே நாளுக்கு நாள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு - ஆறுமுகத்தான் குளம் கிராமத்தில் இருக்கும் ஒரு மூதாட்டி ஒருவரின் சோகக் கதையே இது,
30 வருடமாக படுத்த படுக்கையில் இருக்கும் மகனும், வாய் பேச முடியாத பேத்தி ஒருவரையும் வைத்துக் கொண்டு துயரடையும் இந்த மூதாட்டிக்கு உதவ முன்வருபவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
முழுமையான தகவல்கள் காணொளியில்,
இவர்களுக்கு உதவி புரிய விரும்பினால் 0212030600, 0767776363 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்க...
