யாழில் 14 வருடங்களாக வீதிகளில் தொடரும் கண்ணீர் பயணம்! பலரையும் கலங்க வைக்கும் சம்பவம் (Video)
இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும், இரத்த வரலாறும் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்தும் எமது முன்னாள் போராளிகளின் கண்ணீர் பயணம் மட்டும் எம்மண்ணில் தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது.
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம்.
ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளி ஒருவர் வறுமை காரணமாக யாசகம் பெறும் அவலத்தையும் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |