வறுமையில் தவிக்கும் இரண்டு மாவீரர்களின் குடும்பம்
தமிழர்களின் இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகள் தம் இனத்திற்காக உயிரை நீத்துள்ளனர்.
இவ்வாறு உயிர் துறந்த மாவீரர்களின் குடும்பங்கள் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடியில் துன்பப்படும் அவல நிலை ஏராளம்.
இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும், இரத்த வரலாறும் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் கடந்தும் எமது முன்னாள் போராளிகளின் குடும்பத்தின் கண்ணீர் பயணம் மட்டும் எம் மண்ணில் தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது.
அரசியல்வாதிகளின் கண்ணுக்கு புலனாகாத வறுமையில் தவிக்கும் உயிர்நீத்த இரண்டு மாவீரர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரமில்லா வலி சுமந்த கதை இது.
மாற்றம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் உதவ யாருமின்றி,உணவின்றி எறிகுண்டு காயங்களை உடலில் சுமந்தவாறு தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' என்ற காணொளி ஊடாக உயிர்நீத்த இரண்டு மாவீரர்களின் குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600