நேபாளத்தில் ஹீரோவாக மாறிய இலங்கை அரசியல்வாதி! உயிர்களை காப்பாற்றி தானும் தப்பிய செந்தில்
அண்மையில் நேபாளத்தில் நடந்த மக்கள் புரட்சி போராட்டங்களின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செந்தில் தொண்டமான் தொழிற்சங்க மகாநாட்டிற்கு சென்றிருந்த வேலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
தீ விபத்தின் போது ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் செந்தில் தொண்டமான் ஈடுபட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
அவரின் செயற்பாடு காரணமாக பலரின் உயிர் காப்பாற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
செந்தில் தொண்டமானின் செயல்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, உயிர் தப்பிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் போது கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட செந்தில் தொண்டமான் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேபாளத்தில் அவர் தங்கியிருந்தமை இதன்மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
