கெஹெலியவின் பிணையை எதிர்த்த சட்டமா அதிபர்! வழக்கில் கடும் வாதப்பிரதிவாதம்
முந்தைய அரசாங்கத்தின் போது தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு இன்று இடம்பெற்று வருகிறது.
இதன்படி பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக இன்று (16) கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகைகள்
இந்நிலையில் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இந்த பிரதிவாதிகளை பிணையில் செல்ல அனுமதிப்பதை சட்டமா அதிபர் எதிர்க்கிறார் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை தொடர்பாக அவர்களின் சட்டத்தரணிகள் தற்போது தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 32 நிமிடங்கள் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
