மீண்டும் மிகப் பெரிய கொரோனா அலைகள் ஏற்படலாம்: எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்களை சமூகத்தில் அதிகளவில் அடையாளம் காண முடிந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மீண்டும் ஒரு முறை கீழ் மட்டத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரிப்பை காட்டுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul rohana)கூறியுள்ளார்.
இந்த நிலைமை காரணமாக மிக விரைவில் சாதாரண மக்கள் மத்தியில் அங்காங்கே கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாத நிலைமையை காணக் கூடியதாக உள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிரமமான மட்டத்திற்கு மிகப் பெரிய கொரோனா அலைகள் ஏற்படக் கூடும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
