IMF ஒப்பந்தத்தை எதிர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கட்சியின் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான தன்னிச்சையான கொடுக்கல் வாங்கல்களினால் அரசாங்கம் கொண்டு வந்த சகல பிரேரணைகளுக்கும் நிபந்தனையின்றி உடன்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கட்சிக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.

பாதகமான நிபந்தனை
அங்கு கருத்து வௌியிட்டுள்ள எம்.பி.க்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கல் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வெற்றிகரமான அடைவுகளை எட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தம் பாதகமான நிபந்தனைகளுடன் கைச்சாத்திடப்பட்டு அந்த உடன்படிக்கை நாட்டுக்கு முன்வைக்கப்படாததன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு ஏகமனதாக அதனை எதிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri