பிரான்சில் வெப்ப அலைக்கு மத்தியில் 27ஆவது தமிழர் விளையாட்டு விழா- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரான்சில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பல்வேறு விசேட நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், நாளை (28.06.2026) நடைபெறவுள்ள "Festival Tamoul" (தமிழர் விளையாட்டு விழா) திட்டமிட்டபடி நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ் மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் - பிரான்ஸ் இணைந்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விழா L'Aire des Vents (Dugny), Parc Georges-Valbon, 10 Rue Normandie-Niemen, 93440 Dugny என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு
ஐபிசி தமிழ், தமிழ்வின் மற்றும் லங்காசிறி ஆகிய ஊடகங்களின் பிரதான அனுசரணையுடன் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை எடுத்துரைக்கும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
பிரான்சில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக சில நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தபோதிலும், தமிழர் விளையாட்டு விழா எந்த மாற்றமும் இன்றி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
27ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த தமிழர் விளையாட்டு விழாவில் ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து, தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் முக்கிய நிகழ்வாக இந்த விழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
