அதிகரித்து வரும் தொற்றா நோய்கள்! மருத்துவர் வலியுறுத்தியுள்ள விடயம்
தற்காலத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களுக்கான முக்கிய காரணியாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காணப்படுவதாக சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதே பல நோய்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.
தொற்றா நோய்கள்
புதிய வகை உணவுப் பழக்கங்கள் மற்றும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்வதால் நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.மூன்று வேளை உணவை உட்கொள்ளும் போது, முறையான உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
அன்றாட உணவில் குறைந்தது இரண்டு வகையான மரக்கறிகள், இரண்டு பழங்கள் மற்றும் ஒரு கீரை வகையை உள்ளடக்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஐந்து விடயங்களையும் சிறுவர்களுக்குப் பழக்கப்படுத்துவது அவசியமாகும்.

அதிகப்படியான கொழுப்பு மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். தற்காலத்தில் இனிப்பு மற்றும் உப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், 35-40 வயதிற்குள்ளேயே தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன.
சரியான உணவுப் பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுவதன் ஊடாக, உடல் பருமன் மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்த முடியும் என மருத்துவர் வலியுறுத்தினார்.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri