3 மாதங்களாக மூடப்பட்டுள்ள தொழிற்சாலை: போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் (Photos)

SL Protest Hatton
By Mayuri Oct 24, 2023 02:38 PM GMT
Report

மலையகத்தில் உள்ள மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் குழு ஒன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

நிலுவை சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவை வழங்கக் கோரி குறித்த போராட்டம் நேற்றைய தினம் (23.10.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 மாத சம்பள நிலுவை

இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் முதல் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதோடு, மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் தாம் பணியாற்றியமைக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என, ஹட்டன் நோர்வூட், நியூவெளியில் அமைந்துள்ள நோர்வூட் பெஷன்ஸ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! டிசம்பர் மாதம் வங்கி கணக்கிற்கு வரப் போகும் பணம்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! டிசம்பர் மாதம் வங்கி கணக்கிற்கு வரப் போகும் பணம்

3 மாதங்களாக மூடப்பட்டுள்ள தொழிற்சாலை: போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் (Photos) | Upcountry Workers Protest At Hatton

இது தொடர்பில் போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில், எங்கள் நிலுவைத் தொகையைக் கொடுங்கள். தொழிற்சாலையை நம்பி நாங்கள் காத்திருந்தோம். இனியும் காத்திருக்க முடியாது. சம்பளம் இல்லாமல் காத்திருக்க முடியாது. நிலுவை சம்பளம் மற்றும் பி கார்டை கொடுத்தால் நாங்கள் வேறு எங்காவது வேலைக்கு செல்ல முடியும்.

ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கின்றோம். கடந்த வருடத்திற்கான மேலதிக கொடுப்பனவு தொகையான 20,000 ரூபா இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கான நிலுவை ஊதியம் கிடைக்காததாலும், வேலையிழந்து வருமானம் இல்லாமல் போயுள்ளமையாலும், மிகுந்த வறுமையில் வாடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணியில் ஈரான், ரஷ்யா மற்றும் சீனா (Video)

இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணியில் ஈரான், ரஷ்யா மற்றும் சீனா (Video)

2000 இற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு

இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் 2,000 இற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களில் சுமார் 300 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

3 மாதங்களாக மூடப்பட்டுள்ள தொழிற்சாலை: போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் (Photos) | Upcountry Workers Protest At Hatton

எவ்வாறெனினும், பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர, போராட்டக்காரர்களுக்கு பதிலளிக்க தொழிற்சாலை வளாகத்திற்குள் எந்தப் பொறுப்பான அதிகாரியும் இருக்கவில்லை. நோவூட் பெஷன்ஸ் நிறுவனம் பொல்கஹவெலயில் ஒரு தொழிற்சாலையைக் கொண்டுள்ளது, இது நாளொன்றுக்கு 2,000,000 தைத்த ஆடைகளை உற்பத்தி செய்வதாக முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவிட் தொற்றுநோய் நிலைமைக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார சவால்கள் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் அரசாங்கத்தால் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பார்க்கப்படும் பூநகரி: சுட்டிக்காட்டும் சிறீதரன்

ரணில் அரசாங்கத்தால் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பார்க்கப்படும் பூநகரி: சுட்டிக்காட்டும் சிறீதரன்

Gallery
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US