இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணியில் ஈரான், ரஷ்யா மற்றும் சீனா (Video)
இஸ்ரேலில் தற்போது மையம் கொண்டுள்ள பயங்கரமான யுத்தத்தின் பின்னணியில் ஈரான், ரஷ்யா மற்றும் சீனா போன்ற தேசங்களின் வியூகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருப்பது தற்போது மெதுமெதுவாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட அதிரடி தாக்குதலின் பின்னணியிலும் கூட ஹமாஸனின் இஸ்ரேல் விரோத உணர்வையும் கடந்து இந்த 3 நாடுகளினதும் வகிபாகங்கள் இருக்கலாம் என்றே நம்புகின்றார்கள் சில மேற்குலக ஆய்வாளர்கள்.
ஈரான், ரஷ்யா மற்றும் சீனா இந்த 3 நாடுகளிலும் ஈரானின் நலன் என்பது நேரடியானது.
இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உலக வரைபடத்திலிருந்து அழித்து விட வேண்டும் என்பதற்காக கங்கணங்கட்டிக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஈரான் அணுவாயுத தயாரிப்பில் கிட்டத்தட்ட அதன் நிறைவு நிலையை அடைந்து விட்டது.
ஈரான் மாத்திரம் அணுவாயுத தயாரிப்பில் வெற்றி பெற்று விட்டால் அந்த பிராந்தியத்தில் இஸ்ரேலினதோ அல்லது அமெரிக்காவினதோ மீளாண்மையை அவர்கள் முற்றாக மறந்து விட வேண்டியது தான்.
இது தொடர்பான விரிவான விடயங்களை அலசி ஆராய்ந்து வருகிறது நிதர்சனம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |