மலையக அதிகார சபையை நிலைக்கு யார் காரணம்! உண்மைகளை தெரியப்படுத்திய முன்னாள் எம்.பி
மலையக அதிகார சபை என அறியப்படும் பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை அரசாங்கம் மூடவுள்ளதாக தெரிவித்தமையானது தற்போது பேசப்படும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
குறித்த சபைக்கு ஜீவன் தொண்டமானால் நியமிக்கப்பட்ட தலைவரின் கவனயீனமே தற்போது இந்த சபையை மூடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகர் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தோட்டஉட்கட்டமைப்பு அமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வந்ததன் பின்னர் அவர்களது பெயரில் அவர்கள் ஒரு மன்றத்தை உருவாக்குகிறார்கள்.
அதனையும்,ட்ரஸ்டையும் வைத்து தான் தோட்டஉட்கட்டமைப்பு அமைச்சு இயங்கியது” என குறிப்பிட்டார்.
ஏன் இதனை மூட வேண்டும், மூடினால் என்ன நடக்கும், இதற்கு முன்னர் அங்கு என்ன நடந்தது? என்பது தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...