சார்லி கிர்க் படுகொலையில் முக்கிய திருப்பம்! மரண தண்டனை வழங்க ட்ரம்ப் வலியுறுத்து..

Donald Trump United States of America Crime Gun Shooting
By Shadhu Shanker Sep 12, 2025 07:05 PM GMT
Report

அமெரிக்காவின் முக்கிய அரசியல் ஆய்வாளர் சார்லி கிர்க் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அந்நாட்டு பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பலஸ்தீனம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை...

பலஸ்தீனம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை...

சார்லி ஜேம்ஸ் கிர்க் படுகொலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிக நம்பகமான, நெருங்கிய நண்பரான அரசியல் ஆர்வலர் சார்லி ஜேம்ஸ் கிர்க், கடந்த 10ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

சார்லி கிர்க் படுகொலையில் முக்கிய திருப்பம்! மரண தண்டனை வழங்க ட்ரம்ப் வலியுறுத்து.. | Suspect In Charlie Kirk Shooting Arrested

தாராளவாத கொள்கை கொண்ட கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளை பரப்பி வந்த இவர் இதற்காக பல கல்லூரிகளில் அவர் திறந்தவெளி விவாதம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்தவகையில் உட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடையே கலந்துரையாடிய சார்லி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது அவரது கழுத்தில் திடீரென குண்டு பாய்ந்த நிலையில், அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு மாடியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்து விசாரித்தனர்.

உச்சக்கட்ட போராட்டத்தின் பின்னர் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் நியமனம்

உச்சக்கட்ட போராட்டத்தின் பின்னர் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் நியமனம்

சந்தேக நபர் கைது

ஆனால் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தெரிந்த பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சார்லி கிர்க் படுகொலையில் முக்கிய திருப்பம்! மரண தண்டனை வழங்க ட்ரம்ப் வலியுறுத்து.. | Suspect In Charlie Kirk Shooting Arrested

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் நெருக்கமானவரின் தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கான உயர்ந்த அளவிலான உறுதிப்பாடு இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

குற்றவாளிக்கு 22 வயது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அதேபோல் இங்கிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சார்லஸ் ஜேம்ஸ் கிர்க் படுகொலை! அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய அறிவிப்பு..

சார்லஸ் ஜேம்ஸ் கிர்க் படுகொலை! அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய அறிவிப்பு..

1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US