வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவைகள்
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மலையக (Up country) தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹப்புத்தளை (Haputale) - பண்டாரவளைக்கு (Bandarawela) இடையில் இன்று (23.05.2024) மரங்கள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்தமையால் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
தொடருந்து சேவை
இதன்காரணமாக தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, தொடருந்து திணைக்கள ஊழியர்கள் மற்றும் தியத்தலாவ இராணுவ முகாமின் படையினர் இணைந்து மரங்களை வெட்டி மண்மேடுகளை அகற்றி தொடருந்து பாதையை சீரமைத்துள்ளனர்.
இதேவேளை, ஹப்புத்தளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவ பிரதேசங்களிலுள்ள பல வீடுகள் தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் காற்றினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |