திருகோணமலையில் கார் விபத்து: சிறுமி ஒருவர் பரிதாபமாக பலி
திருகோணமலை (Trincomalee) – ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (23.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி - அல்வாய் மேற்கு, திக்கம் பகுதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் வடக்கு - கிழக்கு பிராந்தியப் பொறியியலாளர் சிவயோகநாதன் நிதர்சன்
(வயது 35), அவரது மனைவியான வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்
நிதர்சன் தர்சினி (வயது 35) ஆகிய இருவரும் தமது இரண்டு பிள்ளைகளுடன் காரில்
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு நோக்கிப்
பயணித்துக்கொண்டிருந்த வேளை, திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில்
கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து - வீதியை விட்டு விலகி
விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, அவர்கள் பயணித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam