மலையக மக்களை ஏமாற்றும் அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டுவோம்! திகாம்பரம் சூளுரை
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களை ஏமாற்றியுள்ள இந்த அரசாங்கத்துக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்(Palany Thigambaram) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என்பதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
பிரச்சினைக்குத் தீர்வு
ஹட்டனில் இன்று (28.07.2024) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்படும் என்று மே முதலாம் திகதி கொட்டகலைக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் உறுதியளித்தனர்.
ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கூட மீளப்பெறப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக தேர்தல் குண்டாகவே 1,700 ரூபா போடப்பட்டுள்ளது என அன்றே நான் சுட்டிக்காட்டி இருந்தேன். அது உண்மையாகியுள்ளது.
அரசாங்கமும், கம்பனிகளும் இணைந்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளன. எமது மக்களை எந்நாளும் ஏமாற்ற முடியாது. எமது ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். சஜித் பிரேமதாச இது தொடர்பில் எம்மிடம் உறுதியளித்துள்ளார்.
மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். மக்கள் எமது பக்கமே உள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களுக்கு துரோகம் இழைக்காது. எமது ஆட்சியில் காணி உரிமையும் நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
