அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் கம்பனிகாரர்களை கட்டுப்படுத்துங்கள்: மனோ எம்.பி காட்டம்
"பொலிஸ்காரர்களை போலவும், நீதிமன்ற
கட்டளை இருப்பதாகவும் நடித்து அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் முறைக்கேடானவர்கள் இவர்கள் என சற்றுமுன் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கூறினேன். கம்பனிகாரர்களை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி காவத்தை பிளான்டேசன் வெள்ளந்துரை தோட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது,

சனல் 4 காணொளி தொடர்பில் சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இலங்கை இராணுவம்! பகிரங்க குற்றச்சாட்டு (video)
முழுமையான தீர்வு
‘‘ஒவ்வொருமுறையும் இவ்வாறான சம்பவம் நடக்கிறது. நாம் கேள்வி எழுப்புகிறோம். நீங்கள் பதில் கூறுகிறீர்கள். அல்லது ஒரு அரசாங்க அரசியல்வாதியை அங்கே அனுப்பி அதன் பின் ஒளிந்து கொள்கிறீர்கள்.
இதற்கு தீர்வுதான் என்ன? என்று மேலும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணரிடம் கேட்டேன்.
இந்த கம்பனிகாரர்களுடன் பணியாற்ற முடியவில்லை. ஜனாதிபதியிடம் பேசி முழுமையான தீர்வை தேடுவோம் என ரமேஷ் பத்திரண பதிலளித்தார்'' என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி கஹவத்தையில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரின் மண் குடில் ஒன்று உடைத்து முழுமையாக சேதப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவர் தனக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக பிரிதொரு குடிலை அமைத்து வசிப்பதற்கு முயற்சித்துள்ளார்.
குறித்த தொழிலாளரின் செயற்பாட்டுக்கு தோட்ட நிர்வாகம் தன்னுடைய முழுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.
எனினும் குடிலை அகற்றுவதற்கு முற்றிலும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சற்று முன்னர் தலைக்கவசம் அணிந்தவாறு தங்களை ஓய்வுபெற்ற விசேட அதிரடிப்படையினர் என அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் குறித்த தொழிலாளியின் வீட்டினை முழுமையாக அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.




