மலையக மக்கள் முன்னணி எந்த போராட்டத்தையும் வடக்கு - கிழக்கு கட்சிகளுடன் இணைந்து முன்னெடுக்க தயாராக இருக்கின்றது: எம்.பி.இராதாகிருஷ்ணன்(Video)
அவசரகால சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் மலையக மக்கள் முன்னணி எந்த போராட்டத்தையும் வடக்கு, கிழக்கு கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவசர கால சட்டத்தை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் கையெழுத்து வேட்டை இன்று (06.03) நுவரெலியாவில் இடம்பெற்றது.
நுவரெலியா பிரதான நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சாணக்கியன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
அவசர கால சட்டம் என்பது தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டமாகவே இந்த நாட்டில் பலரும் கருதுகின்றார்கள். ஆனால் அந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் இருக்கின்ற அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு சட்டமாகும்.
இந்த சட்டத்தின் மூலமான எந்த ஒரு நபரையும் கைது செய்கின்ற அதிகாரம் பொலிஸாரிடம் இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் இணைந்து இந்த சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும். இந்த சட்டத்தின் மூலமாக அதிக பாதிப்பைச் சந்தித்த மலையக கட்சி என்றால் அது மலையக மக்கள் முன்னணி என்பதை அனைவரும் அறிவார்கள்.
எங்களுடைய கட்சியின் தலைவர் இந்த சட்டத்தின் மூலமாகக் கைது செய்யப்பட்டார். அவர் துன்புறுத்தப்பட்டார். அதே போல எங்களுடைய கட்சியின் விசுவாசிகள் கைது செய்யப்பட்டு எந்த காரணமும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
எனவே யுத்தம் வடக்கு, கிழக்கிலே நடந்தாலும் மலையகப் பகுதியில் இருக்கின்ற இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். எனவே இந்த சட்டம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மலையகத்தில் மிகவும் அக்கறையாக இருக்கின்றோம்.
நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற பொழுது வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளைப் பாடசாலைகளில் செய்திருக்கின்றேன். அதன் போது எனக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.
அதற்கு காரணம் நாங்கள் இரண்டு சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது
காலத்தின் கட்டாயமாகும். அப்படி செயற்பட்டால் மாத்திரமே வடக்கு, கிழக்கு மக்களும்
மலையக மக்களும் எங்களுடைய உரிமைகளையும் அபிவிருத்தியையும் பூர்த்தி செய்து
கொள்ள முடியும். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியும்
நன்கு உணர்ந்து செயற்படுகின்றது. இந்த நிலைமை தொடர வேண்டும்'' இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 29 நிமிடங்கள் முன்
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri