கின்னஸ் சாதனைக்காக யாழ்.சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி (Video)
கின்னஸ் சாதனைக்காக யாழ்ப்பாணம் சென்ற இரு மலையக இளைஞர்களிடம் யாழ.பொலிஸார் மோசமான முறையில் நடந்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொகவந்தலாவை, கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், உலக சாதனை படைக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் கோட்டையிலிருந்து காலி கோட்டை வரையில் தொடர் நடைபவனியாக செல்ல தயாராகியுள்ளனர்.
இதற்காக நேற்று(13.06.2023) யாழ்ப்பாணம் சென்ற இரு இளைஞர்களிடம்,பொலிஸார் மோசமான வார்த்தைகளினால் பேசி சட்டையை பிடித்து துரத்தியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொலிஸாரின் இடையூறுகளை தாண்டி தமது நடை பவணியை குறித்த இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர்.
வவுனியாவை சென்றடைந்த இளைஞர்கள்
இதற்கமைய 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து செல்லவுள்ள இரட்டையர்கள் வவுனியாவை சென்றடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவை - கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள் இன்று (14.06.2023) அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து 9 மணித்தியாலங்களில் மதியம் 01.00 மணியளவில் வவுனியா நகரை சென்றடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக பயணத்தினை தொடர்ந்த, இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கவுள்ளனர்.
இதேவேளை, இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி-திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா? News Lankasri

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
