டிக்கிரி மெனிக்கே தொடருந்து தடம் புரள்வு : மலையக தொடருந்து சேவை பாதிப்பு
நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் தொடருந்து ஹட்டன் மற்றும் கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (21) காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் தொடருந்தின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட சேவை
இதன்போது தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று, தொடருந்து திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் மோதியதால், கட்டிடத்திற்கும் தொடருந்து பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் தொடருந்துகள் ஹட்டன் தொடருந்து நிலையம் வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் அனைத்து தொடருந்துகளும் கொட்டகலை தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தொடருந்துகளுக்கு இடையில் அரச பேருந்துகளை கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |