முக்கிய தீர்மானங்களுடன் கூடவுள்ள மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை
மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை இம்மாதம் 10ம் திகதி தலவாக்கலை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் கூடவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளரும்,கவுன்சில் உறுப்பினரும்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல்பீட உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி அதன் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையக இளைஞர் முன்னணி,மலையக மகளிர் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல்
குறித்த தேசிய சபை கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடத்தப்படும் பிரசார கூட்டத்தொடர் தொடர்பிலான தீர்மானம், முன்னணியின் தலைவர் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு உட்பட பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam