லால்காந்தவை உடன் கைது செய்ய வேண்டும் : உதய கம்மன்பில பகிரங்கம்
தேசிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தவை குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடாளுமன்றத்தை கைப்பற்ற திட்டமிட்டதாக பகிரங்கமாக தெரிவித்ததால் , அவரைக் கைது செய்யலாம்.
மக்களை நாடாளுமன்றத்தை கைப்பற்ற வரச் சொன்னது நாங்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் வர முடியாது என விட்டுச் சென்றதால் அதனைச் செய்ய முடியாது போனது என லால்காந்த தெரிவித்திருந்தார்.
அரகலய காலத்தில் ஜே.வி.பியினரால் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முடிந்திருந்தால் இலங்கையில் பங்களாதேசுக்கு இன்று ஏற்பட்ட நிலைதான் ஏற்பட்டிருக்கும். நாடு இன்றும் எரிந்து கொண்டிருக்கும்.
லால்காந்த பரிந்துரைத்தபடி, பங்களாதேஷில் இன்று வீதியில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. விசாரிக்கப்படும் மக்கள் தண்டனையாக கொல்லப்படுகிறார்கள்.
அரசியல் ஒப்பந்தம்
இன்று வங்கதேசம் அராஜகமாகவும், இரத்த ஆறு ஓடுவதாகவும் மாறிவிட்டது. நாடு முழுவதும் பிணங்கள் குவிந்து கிடக்கிறது. அவ்வாறானதொரு நிலையை உருவாக்கவே இருந்ததாக லால்காந்த கூறுகிறார்.
அநுரவுடன் எந்தவித ஒப்பந்தமும் இல்லையாயின் லால் காந்தை உடனடியாக கைது செய்ய வேண்டும்.குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமே.
இந்நிலையில், நாடாளுமன்றத்தை கைப்பற்றி பேரழிவை ஏற்படுத்த தயாராகியதாக கூறுகிறார்.. மற்றவர்களைப் போல அல்ல அவர், லால்காந்த நேர்மையான மனிதர். உண்மையைச் சொல்கிறார். மனதில் உள்ளதை சொல்லுகிறார். இம்முறையும் உண்மையையே சொல்லுகிறார்.
மேலும், நாடாளுமன்றத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டதற்காக அமெரிக்காவில் டொனால்ட் டிரம்புக்கு சட்டம் பயன்படுத்தப்பட்டால், அரசாங்கம் இப்போது லால்காந்தாவைக் கைது செய்ய வேண்டும் “ என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |