மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம்(7) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மன்றில் முன்னிலையாகியுள்ளனார்.
பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள்
விசாரணைகளின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த வழக்கு விசாரணையின் போது நீதி மன்றத்தால் பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்படிருந்தன.
குறிப்பாக பேராசிரியர் ராஜ்சோம தேவ் தலைமையில் சதோச மனிதபுதைகுழி பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஸ்கான் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், சதோச மனித புதை குழியில் மீட்கப்பட்ட என்புகள் மற்றும் பிற பொருள் மாதிரிகளை வெவ்வேறாக பிரிப்பதற்கான தீர்மானமும் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், என்புகளை பால், வயது, மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆரய்வதற்கான செய்ற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஏனைய சான்று பொருட்களை பேரசிரியர் ராஜ் சோம தேவிடம் கையளிக்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக அக்டோபர் மாதம் திகதியிடப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ச,பேராசிரியர் ராஜ்சோம தேவ்,காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள்,OMP அலுவளக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam