அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் திருவுருவச்சிலை திறந்து வைப்பு(Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த நிலையில் காணாமல் போயிருந்த அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் திருவுருவச்சிலை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் இந்த சிலை இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை ஜேசுசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த சிலையைத் திறந்துவைத்தார்.
இந்த திறப்பு விழாவில் இலங்கை ஜேசுசபையின் தலைவர் உட்பட அருட்தந்தையர்கள், ஜேசுசபை துறவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
1948ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மட்டக்களப்பு வருகை தந்த அவர் புனித மைக்கேல் கல்லூரி ஆசிரியராகவும், தொழினுட்ப பயிற்சி கல்லூரியின் ஸ்தாபகமாகவும் செயற்பட்டதுடன், மட்டக்களப்பின் விளையாட்டுத்துறைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.
அத்துடன் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகச் சர்வதேச ரீதியாகக் குரல் கொடுத்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஏறாவூர் பகுதி ஊடாக
பயணித்துக் கொண்டிருந்த போது அருட்தந்தை காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.






இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
