காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க நாட்டு துறவியின் உருவச்சிலை திறப்பு (Photos)
கடந்த 1990 ஆண்டு மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க நாட்டின் துறவியான அருட்தந்தை ஹேபியரின் நினைவாக வாவிக்கரை பூங்காவிற்கு அருகில் அமைக்கப்பட்ட உருவச் சிலை இலங்கைக்கான ஜேசுசபையின் மேலாளர் அருட்தந்தை ரொக்சர் கிரே, மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கான ஜேசு சபையால் அமைக்கப்பட்ட அருட்தந்தை ஹேபியரின் நினைவு உருவச் சிலையை வைபவரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை, இலங்கைக்கான ஜேசு சபையின் மேலாளர் அருட்தந்தை ரொக்சர் கிரே மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்டதிலுள்ள தேவாலயங்களின் பங்குத் தந்தையான அருட்தந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டு உருவச்சிலையை திறந்து வைத்தனர்.
இவர் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி வாழைச் சேனைப் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam
