வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் தலைவர்களான கஞ்சிபானை இம்ரான், லொக்கு பட்டி மற்றும் ரொடும்பா அமில ஆகியோரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அந்நாட்டின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது.
இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களம் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் போலியானவை
இதற்கமைய, சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெலாரஸின் இலங்கை துணைத்தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெலாரஸில் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களான கஞ்சிபானை இம்ரான், லொக்கு பட்டி மற்றும் ரொடும்பா அமில ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது பெலாரஸில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
