கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நெருக்கடி
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா பெற நீண்ட வரிசை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்குள் நுழைவதற்கான விசாக்களை வழங்குவதற்கு VFS குளோபல் நிறுவனத்தை நீக்கிவிட்டு பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்க உயர் நீதிமன்றம் கடந்த 02 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
எனினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பழைய முறைப்படி இணையவழி விசா வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்காத காரணத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணையவழி முறைமை விசா
இந்த உயர் நீதிமன்ற உத்தரவுடன் இணையவழி முறைமை மூலம் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தே விசா பெற வேண்டும்.
இலங்கையில் ஓகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கண்டி எசல பெரஹராவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒரே நேரத்தில் வரும்போது, விமான நிலையத்தில் வருகை விசா பெறுவதற்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
