நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கும் அமெரிக்க நிறுவனங்கள் - ரணில் எச்சரிக்கை
அமெரிக்காவிற்கு சொந்தமான கூகுள், பேஸ்புக், யுடியுப் போன்ற நிறுவனங்கள், நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்யக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கக் கூடிய இயலுமை ஆபத்தானது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை நாம் அனைவரும் குறைத்து மதிப்பீடு செய்துவிடக் கூடாது எனுவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேபாளத்தில் நிலவும் சூழ்நிலைமைகள் தொடர்பில் அவர் இவ்வாறு தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மைய நாட்களில் நேபாளத்தில் இடம்பெற்று வரும் வன்முறையை கண்டித்ததுடன் நாட்டில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
ஜனநாயகத்திற்கு அவமரியாதை
நேபாளத்தில் அரசியல்வாதிகள் நாளாந்த அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி, நீண்டகால பிரச்சினைகளை புறக்கணித்ததன் விளைவாகவே உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளின் இந்த செயற்பாடு இளைஞர்களின் பெரும் அதிருப்திக்குக் காரணமானது என அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்வதற்கான முடிவும் பிரச்சினைகளின் அடிப்படை காரணங்களைத் தீர்க்காதமையும் இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேபாள நாடாளுமன்றமும் நீதிமன்றக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டது “நேபாள ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அவமரியாதை” எனவும் இதனை கண்டிபப்தகாவும் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை பெற்ற இராணுவத்தின் பொறுப்பு நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, அரசியலமைப்பின்படி தேர்தலை நடத்துவதாகும் குறிப்பிட்டுள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்
நேபாளம் புத்த பிரான் பிறந்த புனித பூமி என்பதால் அது இலங்கைக்கு சிறப்பு இடம் வகிப்பதாகவும், நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் காணப்படும் திறமையின்மையே இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த மத கொள்கைகள் கோட்பாடுகளின் அடிப்படையில் நேபாள அரசாங்கம் பின்பற்றும் என நம்புவதாக ரணில் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் உயிரிழந்த இளைஞர்கள் உட்பட அனைத்து கொலைகளையும் கண்டிப்பதாகவும், முன்னாள் பிரதமரின் இல்லம் எரிக்கப்பட்டதும், அவரது மனைவி கொல்லப்பட்டதும் மிகவும் துயரமான நிகழ்வாகும் என தெரிவித்துள்ளார்.
கொலைகளை கண்டிப்பதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகள் இவ்வளவு தூரம் செல்லக்கூடாது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
