யாழிலிருந்து அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து வழிமறிக்கப்பட்டமையால் அமைதியின்மை (photos)
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவுக்கு அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து, பரந்தன் சந்தி பகுதியில் தனியார் போக்குவரத்து சங்கத்தினரால் இடைமறிக்கப்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (27.01.2023) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்காக போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது.

அரச பேருந்து வழி மறிப்பு
எனவே வழமை போன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை இன்று காலை ஏற்றி வந்த அரச பேருந்தே இவ்வாறு வழி மறிக்கப்பட்டுள்ளது.
கடமைகளுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் இந்த சம்பவத்தின்போது நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவர் கைது
சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விரைந்து வந்தமையால் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பேருந்து சேவை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும்
செய்யப்படாது, இவ்வாறு பேருந்துகளை வழி மறைப்பது சட்டத்துக்கு புறம்பானது
என தெரிவித்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் கைது
செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam