500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Sri Lankan Peoples Hatton
By Malaivanjan Jul 30, 2026 10:22 AM GMT
Report

மலையகத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையப் பகுதியாக பார்க்கப்படும் ஹட்டன் பேருந்து நிலையம் எந்தவித புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காணப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்கிறது.

மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவுக்கு யாழ்.ஊடக மன்றம் இரங்கல்

மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவுக்கு யாழ்.ஊடக மன்றம் இரங்கல்

சர்வதேச புகழ்பெற்ற சிவனொளி பாதமலை (ஆதாம் சிகரம்), சென் கிளையார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகள், எல்ல சமவெளி, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன் ஆலயம், காயத்திரி பீடம் உள்ளிட்ட பல சுற்றுலா மற்றும் சமயத் தலங்களுக்கு பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரதான இணைப்புத் தளமாகவும் இந்த பேருந்து நிலையம் பார்க்கப்படுகின்றது.

ஹட்டன் பேருந்து நிலையம்

கடந்த 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் பேருந்து நிலையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தனியார் பேருந்து நிலையம் தனியாக அமைக்கப்பட்டு, தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனினும், இந்த இரு நிலையங்களும் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Unrenovated Hatton Bus Stand

குறிப்பாக மழைக்காலங்களில் பேருந்து தரிப்பு நிலையம் முழுவதும் நீர் தேங்கி, பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது என்றும், வளாகம் முழுவதும் குப்பைகள் மற்றும் வெற்றிலை எச்சில்கள் சிதறிக்கிடப்பதுடன், மழைநீர் வடிகால்கள் குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகின்றது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், போதுமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், சிலர் பேருந்து தரிக்கும் பகுதிகளிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

தற்போது உள்ள பொது கழிப்பறைகளும் போதிய சுகாதார பராமரிப்பின்றி காணப்படுவதால், பயணிகளும் பொதுமக்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கை

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தை முழுமையாக நவீனமயமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Unrenovated Hatton Bus Stand

இருப்பினும், 2016ஆம் ஆண்டில் சில தற்காலிக மற்றும் மேலோட்டமான திருத்தப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், நிரந்தர தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, புதிய அரசாங்கம் ஹட்டன் நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருந்தாலும், பேருந்து தரிப்பு நிலையத்தை புனரமைக்கும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, மலையகத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய சுத்தமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் உடனடியாக புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Unrenovated Hatton Bus Stand

500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Unrenovated Hatton Bus Stand

500 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத பேருந்து நிலையம் - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Unrenovated Hatton Bus Stand

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சிவப்பு எச்சரிக்கை! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சிவப்பு எச்சரிக்கை! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்




மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US