புனரமைக்கப்படாத பாடசாலை வீதி! போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் பாரதிபுரம் கிராமத்திலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத்தருமாறு வலியுறுத்தி காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நேற்று (09) காலை ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசியல்வாதிகளின் நடவடிக்கை
சுமார் 600 மீற்றர் தூரம் கொண்ட பாரதிபுரம் பாடசாலை வீதியானது பிரயாணம் மேற்கொள்ள முடியாமல் பள்ளமும், குழியுமாக காணப்படுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளின் நடவடிக்கை இதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தி பிரயாணம் மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், தற்போது நல்ல அரசாங்கம் ஒன்று அமைந்துள்ளமையினால் அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாடசாலை வீதியை புனரமைத்து தருமாறு மூதூர் பாரதிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

