மலையக பிரதேசங்களில் சீரற்ற காலநிலை - விவசாய காணிகள் முற்றாக பாதிப்பு
காலநிலை சீற்றத்தினால் கடந்த சில தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசியுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் நுவரெலியா - டயகம பிரதேசத்தில் 24.05.2021 அன்று முதல் பெய்த கடும் மழை காரணமாக டயகம பிரதேசத்திலிருந்து வரும் ஆகர ஆறு பெருக்கம் எடுத்ததனால் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, திஸ்பனை, ஆகரகந்தை, நாகசேனை, லிந்துலை போன்ற ஆற்றோர பிரதேசங்கள் நீரினால் மூழ்கியுள்ளன.
இதனால் இப்பிரதேசங்களில் விவசாய காணிகள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளதுடன்,
தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஆற்று நீர் உட்புகுந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.



குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam