முக்கிய இரண்டு கட்சிகள் ஒன்றிணையும்: எஸ்.எம். மரிக்கார் உறுதி
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகள் ஒன்றிணைவது நிச்சயமாக நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் இன்று(31.12.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளும் ஒன்றிணையும்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் புதுவருடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் நிச்சயமாக ஒன்றிணையும்.

நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் சென்று கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் நோக்கில் இரண்டு கட்சிகளும் நிச்சயம் ஒன்றிணையும்.
இரண்டு கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் நேற்று(30) நடைபெற்றது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் பொதுவான கொள்கையொன்றையே கொண்டுள்ளதன் காரணமாக இரு கட்சிகளும் ஒன்றிணைவதில் சிக்கல்கள் ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.