சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கியுள்ள ரணில் தரப்பு
ஐக்கிய மக்கள் சக்தியுடன் உரையாடலை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்று (20) கூடிய கட்சியின் செயற்குழு, இந்த ஒப்புதலை வழங்கியதாக கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
வலுப்பெறும் கோரிக்கை
ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் வகையில், ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இதனையடுத்து, இதற்கான உரையாடலுக்கு ஏற்கனவே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தமது ஒப்புதலை வழங்கியிருந்தது. அத்துடன் அதற்காக குழு ஒன்றையும் அமைத்திருந்தது.
இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவும் இன்று தமது ஒப்புதலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
