கம்பளை மரக்கறி தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
கம்பளை (Gampola) - தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று (20) காலை கொட்டகதெனிய பிரதேசத்தில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கடுகண்ணாவ- முதலிவத்த பிரதேசத்தில் வசித்து வரும் கே.ஜீ.விஜேரத்தின என்ற 62 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு
குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி, தவுலகல கொட்டகதெனிய பிரதேசத்தில் வீட்டில் வசிக்கும் நபர் ஒருவரை பார்த்து கொள்வதற்கு ஆக வந்துள்ளார்.
இதனையடுத்து, அந்த நபர் 19ஆம் திகதி காலையில் வீட்டை வீட்டு கடுகண்ணாவ பிரதேசத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளார்.
ஆனால் அந்த வீட்டுக்கு அருகில் உள்ள கத்தரிக்காய் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் கத்தரிக்காய் பிடுங்குவதற்க்கு சென்று அங்கு உள்ள கத்திரிக்காயும் பிடுங்கி உள்ள நிலைமையில் அந்த தோட்டத்தில் மின்சார கம்பி போடப்பட்டு இருந்த நிலையில் அந்த கம்பியில் பட்டு நபர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், இன்று காலை கத்தரிக்காய் தோட்டத்தில் தொழில் செய்ய வந்த இரண்டு நபர்கள் தோட்டத்தில் சடலத்தை கண்டு தவுலகல பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தவுலகல பொலிஸார் சடலத்தை பார்வையிட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |