யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது அடையாளம் தெரியாதோர் கொலை அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.
இச் சம்பவம் நேற்று (11.12.2023) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியானதாகவும் அந்தச் செய்தியை உடனடியாக இணையத்தளத்திலிருந்து அகற்றும்படி கூறியேஅடையாளம் தெரியாதோர் குறித்த ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.
குடும்பத்தினர் மீது தாக்குதல்
2 ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் ஊடகவியலாளர் மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற போது வீதியில் சென்றவர்கள் திரண்டதால் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்கள்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களில் 6 பேர் கொண்ட பெண்கள் குழுவும் இருந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri
