இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : தமிழ் இளைஞன் வெட்டிக் கொலை
குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தையடுத்து அப்பகுதியின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குழு மோதலில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ரஞ்சித் என்ற 28 வயதுடைய திருமணமான நபரே உயிரிழந்துள்ளார்.
இளைஞன் கொலை
மோதலில் காயமடைந்த மேலும் இருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு பிரிவினருக்கும் இடையில் அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு நெருக்கமானவர்கள் மோதலில் தலையிட்டதாகவும், மோதல் தீவிரமடைந்ததையடுத்து இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
