தென்னிலங்கையில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் : மூவர் மரணம் - ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்
களுத்துறையிலுள்ள கரண்ணாகொட கிராமத்தில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
43 வயதான ரொஷான் இந்திக்க பெரேரா, 69 வயதான முத்து குடா ஆராச்சிகே பத்மசிறி விஜய குணவர்தன மற்றும் 64 வயதான பெசுனிகே உபுல் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இது தவிர அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொருவர் தற்போது ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மதுபானம் அல்லது போதைப்பொருள்
எவ்வாறாயினும் இவர்கள் ஒரே இடத்தில் இருந்து மதுபானம் அல்லது போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்களா என விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹொரண மரண விசாரணை அதிகாரி சுமேதா குணவர்தன தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
